• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13ல் சட்டப்பேரவையில் தீர்மானம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13ல் சட்டப்பேரவையில் தீர்மானம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

    பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 'நீட்' செப். 12-ம் தேதி நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றி 'நீட்' தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Also read: கண்முன்னே 2 குழந்தைகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் தாளாமல் தந்தை தற்கொலை!

    இதனிடையே, 'நீட் ' தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, நடப்பு கூட்டத்தொடர் செப்.13ல் நிறைவடைய உள்ளது. அப்போது நடக்க உள்ள கூட்டத் தொடரில் 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: