குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவருகிறார்.

 • Share this:
  இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டுவருகிறார்.

  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

  அதன்படி, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவருகிறார்.

  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: