• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

  • Share this:
    2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சட்டம் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று கூறி தீர்மானம் கொண்டுவந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த சட்டத்திருத்தம் மதசார்பற்ற தன்மைக்கு எதிராக உள்ளது. அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர்கள் அங்கு வாழ முடியாமல் இங்கு வந்து முகாம்களில் வாழ்கின்றனர். ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றிய அரசு வஞ்சனையுடன் செயல்படுகின்றனர்.

    மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ள இந்த சட்டம் தேவையா?, இணக்கமாக வாழ்ந்து வரும் மக்களிடையே பாகுபாட்டை உண்டாக்க நினைக்கும் இந்த சட்டத்தை அரசு ரத்து செய்ய வலியுறுத்துகிறேன். இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் தான் அதிமுக வெளிநடப்பு செய்தனர்” என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய முதலமைச்சர்,“மக்களாட்சி தத்துவத்தின் படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும், உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது” என்றார்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்திற்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Must Read : அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: