• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் இடையே காரசார விவாதம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் இடையே காரசார விவாதம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் இடையே காரசார விவாதம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் இடையே காரசார விவாதம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா, எதிர்ப்பா என்று ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

  • Share this:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அக்கட்சியின் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அப்போது அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அப்போது பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அனைவரும் உள்ளோம். ஆனால் வேளாண் சட்டங்களில் உள்ள உண்மையான சாதக பாதகங்களை, விவசாயிகளிடம் அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லாம் என்றார்.

மேலும், சட்டமன்ற குழுவை அழைத்து சென்று மத்திய அரசை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்கலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Also read: ஒவ்வொரு முறையும், சொல்லிக்கொண்டிருக்க முடியாது.. அமைச்சர்கள், எம்எல்ஏக்களை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்!

அப்போது அவை முன்னர் துரைமுருகன், நீங்கள் ஆட்சியில் இருக்கும் இச்சட்டங்கள் தொடர்பாக  சாதக பாதங்களை கேட்க எத்தனை கடிதங்கள் எழுதினீர்கள் என்று தெரிவிக்கவேண்டும் என்றார். அதோடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறீர்களா இல்லை, ஆதரவு தெரிவிக்கிறீர்களா என்பதை தெளிவாக சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் மாநில அரசை கேட்காமல் இந்த சட்டத்தை கொண்டு வந்தது குறித்து முதலமைச்சர் பேசினார். இப்போது உங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு தான் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இத்தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.

விவசாயிகள் நலன் பற்றி பேசும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான், தீர்மானத்தில் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் குறிப்பிட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதனால் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிய தரவேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இந்த சட்டம் குறித்து மாநில அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது. தீர்ப்பு அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும் என்றும், இது குறித்து சுழல் கமிட்டியை மத்திய அரசுக்கு அனுப்பி முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Also read: இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல; அவர்களுக்கு நாம் இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்

அப்போது மீண்டும் முதலமைச்சர் எழுந்து, உழவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறும் நீங்கள், ஆட்சியில் இருக்கும் போது ஏன் நீங்கள் எதிர்த்து தீர்மானம் கொண்டு வர தயக்கம் காட்டியது ஏன் என்றார். மேலும், பிற மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வந்தபோது,  நீங்கள் ஏன் கொண்டு வரவில்லை? இப்போது நாங்கள் கொண்டு வந்துள்ளோம். தேர்தல் நேரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தோம். அதை தான் நிறைவேற்றுகிறோம். அதனால் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வற்புறுத்தி பணிவுடன் நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அதிமுக சொன்ன சாதக, பாதக கருத்துகளை கலந்து ஆலோசிக்காமல் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்துவதால், நாங்கள் எங்கள் கருத்தை பதிவு செய்து வெளிநடப்பு செய்வதாக எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்பு சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, மறுப்போரே இல்லை என்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் கொண்டு வந்த ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்திய சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: