Home /News /tamil-nadu /

தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் ஏற்பட்ட சர்ச்சை... தமிழக அரசு மீண்டும் உத்தரவு

தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் ஏற்பட்ட சர்ச்சை... தமிழக அரசு மீண்டும் உத்தரவு

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுத்த நிலமடந்தை கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.  அனைத்து கல்வி நிலையங்கள்,  பல்கலைக்கழகங்கள்,  அரசு அலுவலகங்கள்,  பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும்  நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தர்விட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசுத் தின நிகழ்வில்  தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்பட்டது.

    இந்தியாவின் 73வது குடியரசுத் தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசுத்தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் ஒருசில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை செலுத்தவில்லை என்று சிலர் அவர்களை கேட்டுள்ளனர்.

    அதற்கு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதாக அவர்கள் பதிலளித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு உண்டானது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.



    தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்கவேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதனை மீறும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக ஊடகத்திலும் பரவலாக  பகிரப்பட்டது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தமிழக அரசு மீண்டும் புதிய ஆணையை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: Urban Local Body Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு... பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு


    அதில், மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுத்த நிலமடந்தை கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.  அனைத்து கல்வி நிலையங்கள்,  பல்கலைக்கழகங்கள்,  அரசு அலுவலகங்கள்,  பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும்  நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

    கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து இசைவட்டுக்களைக் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பட்டாக பாடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க: நாஞ்சில் சம்பத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது.. தமிழக அரசு அறிவிப்பு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Republic day, Tamilnadu government

    அடுத்த செய்தி