• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு - பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை!

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு - பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை!

MR Gandhi MLA

MR Gandhi MLA

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்புவதோடு அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்

  • Share this:
    தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி வலியுறுத்தியுள்ளார்

    இந்துசமய அறநிலையத்துறை, கலைப் பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அலுவலகங்களில் இந்துக்கள் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும் எனவும், திருக்கோயில்களில் உள்ள ஆபரணங்களை கணக்கெடுத்து அதன் மதிப்பீடுகளை தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட விபத்து போல இனி எந்த கோயிகளிலும் விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலில் சேதமடைந்த பகுதிகள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்புவதோடு அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் எனவும் எம்.ஆர்.காந்தி வலியுறுத்தினார்.

    மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம் என்று தெரிவித்த அவர், . இதற்கான பயிற்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    விநாயகர் சதுர்த்தி தடை:

    இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, "விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி


    நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்", என்று கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "மத்திய அரசு உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா மூன்றாம் நிலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க வலியுறுத்தி இருக்கிறார்.

    Also Read:   ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!

    அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தடை விதித்திருக்கிறது. நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த பரிசீலனை செய்யப்படும் என்றார்.

    அதேபோல, உங்கள் கோரிக்கை அனைத்தையுமே நிறைவேற்றி கொடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: