மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு; பெண்களுக்கு எட்டு மாநகராட்சிகள்

மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு; பெண்களுக்கு எட்டு மாநகராட்சிகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: December 11, 2019, 6:29 PM IST
  • Share this:
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் மாநகராட்சி குறித்த அறிவிப்பை, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன் படி, வேலூர் மாநகராட்சி எஸ்.சி பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது மாநகராட்சிகளைத் தவிர்த்து, சேலம், சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் அனைத்துப்பிரிவைச் சேர்ந்த ஆண்டுகளும் பெண்களும் மேயர் பதவிகளுக்குப் போட்டியிடலாம்.


இந்த அறிவிப்பின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்