• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு - ஆளுநரின் செயலாளர் உடனடியாக விளக்கம் தர ஆணை

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு - ஆளுநரின் செயலாளர் உடனடியாக விளக்கம் தர ஆணை

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஆளுநரின் செயலாளரிடம் உடனடியாக விளக்கம் கோரி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

  • Share this:
    மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்க கோரிய வழக்கில், தமிழக ஆளுநரின் செயலர் உடனடியாக விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இந்த உத்தரவை, நடப்பாண்டே அமல்படுத்தக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் அல்லது திரும்ப அனுப்ப வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



    பிளஸ் 2 முடித்த மாணவர்களில் எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்த விவரம் அவசியம் என்றனர். இதுகுறித்து உடனடியாக பதிலளிக்க ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: