• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவில் இருந்து மீண்டு வர இந்த மருந்து நல்ல பலன் தருவதாக ஆய்வில் தகவல்!

கொரோனாவில் இருந்து மீண்டு வர இந்த மருந்து நல்ல பலன் தருவதாக ஆய்வில் தகவல்!

கொரோனாவில் இருந்து மீண்டு வர இந்த மருந்து நல்ல பலன் தருவதாக ஆய்வில் தகவல்!

கொரோனாவில் இருந்து மீண்டு வர இந்த மருந்து நல்ல பலன் தருவதாக ஆய்வில் தகவல்!

கொரோனா நோயாளிகள், தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர மோனோ குளோனல் ஆன்டிபாடீஸ் (monoclonal antibody) எனப்படும் கலவை மருந்து நல்ல பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், கலவை மருந்து கண்டறியப்பட்டுள்ளது. கெசிரிவிமாப் (Casirivimab), இம்டெவிமாப் (Imdevimab) ஆகிய இரண்டு மருந்துகளையும் கலந்து, நோயாளிகளுக்கு செலுத்தும் போது நல்ல பலன் கிடைப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 12 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு 902 மருந்துகள் வழங்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 83 கொரோனா நோயாளிகளுக்கு கலவை மருந்து செலுத்தப்பட்டதில், 79 பேர் நோய் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததாக, மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறுகிறார்.

    கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தியை மட்டும் கொண்டிருக்கும் இந்த மருந்தின் விலை 60 ஆயிரம் ரூபாய் ஆகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மோனோ குளோனல் ஆன்டிபாடீஸ் மருந்தை செலுத்துவதால் உயிரிழப்பை தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    எதிர்ப்பு சக்தி தரும் மருந்தின் ஆய்வு இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், ஆரம்பகட்ட முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: