கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலையால் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது...! ஆய்வில் தகவல்

கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலையால் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது...! ஆய்வில் தகவல்
கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலை
  • News18
  • Last Updated: November 30, 2019, 5:25 PM IST
  • Share this:
மேட்டூரில் உள்ள கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலையால் நீர் மாசுபாடு ஏற்பட்டிருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலையால் ஏற்பட்ட நீர் மாசுபாட்டின் தாக்கம் மற்றும் மறு சீரமைப்பு முறைகள் குறித்து 3 மாதங்களுக்குள் விரிவான ஆய்வு மேற்கொள்ள இந்திய புவி இயற்பியல் கழகம் உள்ளிட்ட 6 துறைகள் அடங்கிய குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

மேட்டூரில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் கெம்ப்ளாஸ்ட் சன்மார் என்ற நிறுவனம் பாலிவினைல் குளோரைடு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆலையில் 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.


காவிரி ஆறு மற்றும் மேட்டூர் அணையில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் இந்த ரசாயன ஆலை அங்கு தொடர்ந்து சுற்றுச்சூழல் விதிகளை மீறி மாசு ஏற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

மேலும் ஆலையில் உருவாகும் ரசாயனக் கழிவுகளை சட்டத்திற்கு புறம்பாக நீரோடைகளில் கலந்து விடுவதாகவும் இந்த ஆலயால் கடுமையான காற்று மாசுபாடு உருவாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மேட்டூரைச் சேர்ந்த ஜெமினி என்பவர் இந்த ஆலை மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக ஆலையை மூட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆலையை நேரில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.அதன் அடிப்படையில் அண்மையில் இந்த ஆலையை நேரில் ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது அந்த அறிக்கையில்.

கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலையின் இரண்டாவது யூனிட்டில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள ஓடையில் கலப்பதாகவும் இந்த ஓடையில் இருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ஒரு லிட்டர் தண்ணீரில் 250மில்லிகிராம் இருக்க வேண்டிய குளோரைடு 2079 மில்லிகிராம் இருந்ததாகவும், ஒரு லிட்டர் தண்ணீரில் 500 மில்லிகிராம் இருக்க வேண்டிய TDS 4024 மில்லி கிராம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆலைக்கு அருகில் விவசாய நிலங்களில் இருந்த திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ஒரு லிட்டர் தண்ணீரில் 250 மில்லி கிராம் இருக்க வேண்டிய குளோரைடு 1500 மில்லிகிராம் இருந்ததாகவும் ஒரு லிட்டர் தண்ணீரில் 500 மில்லி கிராம் இருக்கவேண்டிய TDS 3 ஆயிரத்து 397 மில்லி கிராம் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இந்த ஆலையிலிருந்து வெளியேறிய தண்ணீர் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் சரியாக எந்த இடத்திலிருந்து இந்தக் கழிவுகள் நீரில் கலக்கிறது என்று விரிவாக நீரியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும்

கெம்பிளாஸ்ட் சன்மார் ஆலையில் மழைக்காலங்களில் பொழியும் நீரை சேகரிப்பதற்கு முறையான மழைநீர் மேலாண்மை அமைப்புகள் இல்லை.

ஆலையில் இருந்து உருவாகும் கழிவு நீரை முழுமையாக மறுசுழற்சி செய்வதாக ஆலை கூறினாலும் அதனை சரியான தரவுகளால் நிரூபிக்க முடியவில்லை

ஆலையில் இருந்து உற்பத்தியாகும் நச்சு ஏற்படுத்தக் கூடிய கழிவுகளை சேமித்து வைக்க 30 இடங்கள் இருப்பதாகவும் ஆனால் அந்த இடங்களில் இருந்து ஏற்படும் கசிவுகளை தடுப்பதற்கு எந்த கசிவு கட்டுப்படுத்தும் அமைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை.

போன்ற காரணங்களால் உயர் மட்ட அளவிலான குழு ஒன்றை அமைத்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை கடந்த 25-ம் தேதி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு மூன்று பேர் கொண்ட குழு அளித்துள்ள அறிக்கையின் மீது அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

மேலும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலையால் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நீர் மாசுபாட்டின் தாக்கம் மற்றும் மறுசீரமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீரி அமைப்பு, சென்னை ஐஐடி-யின் பொறியியல் துறை, தமிழ்நாடு சுகாதாரத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம், மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி கழகத்தின் உறுப்பினர் ஆகியோர் கொண்ட குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு அடுத்த 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

கடந்த மாதம் 13-ம் தேதி இந்த ஆலையில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு தயாரிக்கும் யூனிட்டில் இருந்து வெளியேறிய நச்சுத்தன்மை வாய்ந்த புகையால் 10 பேர் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் அப்போது ஆலையை மூடக்கோரி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading