சிறுவன் சுர்ஜித்தை மீட்க குழி தோண்டும் பணி தொடங்கியது

சிறுவன் சுர்ஜித்தை மீட்க குழி தோண்டும் பணி தொடங்கியது
  • News18
  • Last Updated: October 27, 2019, 11:17 AM IST
  • Share this:
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் அதிநவீன இயந்தரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்க என்எல்சி, ஓஎன்ஜிசி மீட்புக் குழு திட்டமிட்டது.

இதையடுயத்து 32 மணிநேரம் கழித்து தற்போது என்எல்சி, ஓஎன்ஜிசி மீட்புக் குழுவினர் 20 பேர் இணைந்து திருச்சி எல்&டி இடமிருந்து ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


என்எல்சியை சேர்ந்த டிஜிஎம் கோவிந்த ராவ், சிவப்பிரகாசம் தலைமையில் 10 பேரும், இதேபோல் அதிநவீன கருவிகளை கையாளக்கூடிய ஓஎன்ஜிசியை சேர்ந்த சிறப்பு பொறியாளர்கள் 10 பேரும் தற்போது ரிக் இயந்திரங்களை வெற்றிகரமாக பொருத்திகுழி தோண்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் 100 அடி ஆழம் துளையிட 3 முதல் 3.30 மணி நேரம் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதனால் சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் மேலும் 6 மணி நேரம் ஆகும் என தெரிகிறது.

மண் சரியாது என்று உறுதி அளித்ததால் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 100 அடிக்கு மேல் சிறுவன் செல்லாமல் தடுக்க இரும்புத் தகடு பொருத்தப்பட உள்ளதுமீட்புப் பணியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கண்கணித்து வருகின்றனர்

First published: October 27, 2019, 7:21 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading