மறைமலை அடிகளார் வாழ்ந்த பல்லாவரம் இல்லத்தை நினைவிடமாக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை!

மறைமலை அடிகளார்

தமிழ், ஆங்கிலம் , சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்ற மறைமலை அடிகளார், 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தார்.

 • Share this:
  தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளின் 146 வது பிறந்த நாள், அரசு விழாவாக நடைபெறவுள்ள நிலையில் அவர் வாழ்ந்த பல்லாவரம் இல்லத்தை அரசுடைமையாக்கி மறைமலை அடிகளின் நினைவிடமாக மாற்றியமைக்க வேண்டும் என்று அவருடைய பேரன் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

  தமிழ் மொழியின் மீது தீராத காதல்கொண்டிருந்த மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து தமிழ்மொழிக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றியவர் ஆவார்.

  நாகை மாவட்டம் காடம்பாடி எனும் சிற்றூரில் 1876ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி சொக்கநாத பிள்ளை - சின்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் மறைமலை அடிகளார். அவரது இயற்பெயர் சாமி வேதாச்சலம் ஆகும்.

  Also Read:   கிங் மேக்கராக திகழ்ந்த எளியவர்.. கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த தினம் இன்று!

  தமிழ், ஆங்கிலம் , சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்ற மறைமலை அடிகளார், 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தார்.

  சாதாரணமான உரையாடலின் போது கூட தமிழ் மொழியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகள் கலப்பதை கண்டிப்புடன் எதிர்த்து வந்தார். தனது குடும்பத்தினரிடம் பேசும் போதும் பிற மொழி கலப்பின்றி தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

  Also Read:   Exclusive: வடிவேலு 2.0: சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா அறிவாலயம் விசிட்; அடுத்த ரவுண்டுக்கு தயார்?

  இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம் உள்ளிட்ட 54 பிரிவுகளில் நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டிருந்த மறைமலை அடிகளாரை கவுரவிக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சென்னையில் மறைமலை நகரை உருவாக்கினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது மட்டுமின்றி அந்த இல்லம் அமைந்துள்ள சாவடி தெரு என்ற தெருவிற்கும் மறைமலையடிகளின் பெயர்சூட்ட வேண்டும் என்றும் அவருடைய பேரன் மறை தாயுமானவர் கோரிக்கை வைத்துள்ளார்.

  அம்பத்தூர் செய்தியார் கன்னியப்பன்
  Published by:Arun
  First published: