தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி கடிதம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி கடிதம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  • Share this:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், நோய் பரவலைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஒரு வாரகால முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. நாடு முழுவதும், மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என ஸ்டெல்லைட் நிர்வாகம் அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    Must Read : குஜராத்தில் என்ன நடக்கிறது?- அரசு தகவல்படி 78 பேர் மரணம்; எரித்த உடல்களோ 650-க்கும் அதிகம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த ஆலையும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: