Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 5% மட்டுமே.. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுமா?

தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 5% மட்டுமே.. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுமா?

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

Covid Booster Vaccine | அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகும் தீவிர நோய் பாதிப்பை தவிர்க்க பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியமாகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில், இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டர் டோஸ்க்கும் இடையிலான கால இடைவெளியை ஒன்பது மாத காலத்திலிருந்து ஆறு மாத காலமாக மத்திய அரசு சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.

இதன் படி தமிழ்நாட்டில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி முடித்து ஆறு மாதமாகி பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் 3,60,60,204 பேர் ஆவர். இதில் இது வரை 18,08,669 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். அதாவது தகுதியானவர்களில் 5% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.

இரண்டாம் தவணை செலுத்திய போது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி ஆறு மாத காலத்தில் மங்கி போய் விடும் என்பதால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமலும், அப்படியே ஏற்பட்டால் அந்த பாதிப்பு தீவிரமடையாமல் இருக்கவும் பூஸ்டர் டோஸ் அவசியம் என மருத்துவர் ஐஸ்வர்யா தெரிவிக்கிறார்.

ரூ.300 கட்டணம்:

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். 18 முதல் 59 வயது உள்ள மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் ரூ.300 கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 68,50,336 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி பெற்றவர்கள். இவர்களில் 15,97,369 பேர் இதுவரை அரசு மருத்துவமனைகளில் செலுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் செலுத்த தகுதியானவர்களில் 23.31% தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி (PTI/File)


இலவச பூஸ்டர் டோஸ்கள்:

தனியார் மருத்துவமனைகளில்  18-59 வயது பிரிவினர் 2,92,09,868 பேர் தகுதியானவர்கள். இவர்களில் 2,11,300 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதாவது தனியார் மருத்துவமனைகளில் செலுத்த தகுதியானவர்களில் 0.72% பேர் மட்டுமே இது வரை செலுத்தியுள்ளனர்.

எனவே பூஸ்டர் டோஸ்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என மருத்துவர் கீர்த்திவர்மன் தெரிவிக்கிறார்.
”அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் செலுத்தி வரும் நிலையில் நாம் இன்னும் ஒரு பூஸ்டர் டோஸ் கூட பெரும்பான்மை மக்களுக்கு செலுத்தவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதை களத்திலிருந்து நோயாளிகளை காணும் போது கண் கூடாக தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் இதை இலவசமாக வழங்கினால்தான் அதிக மக்கள் செலுத்தில் கொள்ள முடியும்" என்கிறார்.

Also see... இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவு கொள்வது ஆபத்தா..!

அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துkகான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகிறார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Corona, Corona Vaccine, CoronaVirus, Immunity boost

அடுத்த செய்தி