• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Republic Day 2021 | 72-வது குடியரசு தினம்: சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் பன்வாரிலால் புரோஹித்

Republic Day 2021 | 72-வது குடியரசு தினம்: சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் பன்வாரிலால் புரோஹித்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Republic Day 2021 | சென்னை காமராஜர் சாலையில் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்.

  • Share this:
    இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றும் நிலையில், மாநிலங்கள் முழுவதும் அந்தந்த மாநில ஆளுநர்கள் கொடியேற்றுகின்றனர். அந்தநிலையில், சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றிவைத்தார். அவருக்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் ராணுவ வீரர்களும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். சிறப்பு காவல்படையினர், மத்திய பாதுகாப்பு படையினரும் அணிவகுப்பு மரியாதையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தநிகழ்வுகளுக்குப் பிறகு வீரதீர செயலுக்காக 4 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா விருது வழங்குகிறார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: