Home /News /tamil-nadu /

Republic Day 2019: குடியரசு தின விழா - ஆளுநர் தேசியக்கொடியேற்றி மரியாதை

Republic Day 2019: குடியரசு தின விழா - ஆளுநர் தேசியக்கொடியேற்றி மரியாதை

ஆளுநர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

ஆளுநர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்

  • Last Updated :
70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய கொடி ஏற்றிப்பட்டு, குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், இராணுவ தலைமை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சரியாக 8.00 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடி ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செய்தனர். பின் ஆளுநர், காவல்துறை மற்றும் இராணுவதுறை நடத்திய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். இதன் பின் முதல்வர் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெரும் விவசாயிக்கான வேளாண்மைத் துறையின் சிறப்பு விருது ஆகிய விருதகள் வழங்கப்பட்டது.


Published by:Yuvaraj V
First published:

Tags: Republic day

அடுத்த செய்தி