அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை தயார்!

அண்ணா பல்கலைக்கழகம்

புகார்கள் குறித்தும், புகார் அளித்தவர்கள், பல்கலைக் கழக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின.

 • Share this:
  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்  சூரப்பா மீதான  குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை இறுதி செய்துள்ள விசாரணை அதிகாரியான ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அறிக்கையினை முதல்வரை சந்தித்து அளிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இருந்த போது அவர் மீது முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. இதனையடுத்து விசாரனை குழு அமைக்கப்பட்டது. புகார்கள் குறித்தும், புகார் அளித்தவர்கள், பல்கலைக் கழக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின.

  இந்த நிலையில் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு சூரப்பாவிற்கு மே மாதம் 3ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த சூரப்பா தன் மீதான குற்றச்சட்டுகளை மறுத்திருந்தார்.

  Also read: ஜெயலலிதா திறந்த எம்.ஜி.ஆர் சிலையின் கல்வெட்டை மாற்றிய செல்லூர் ராஜு; அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு

  இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய 100 பக்கங்களுக்கு மேல் கொண்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அரசிடம் வழங்கப்பட உள்ளது.
  Published by:Esakki Raja
  First published: