முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான முக்கிய விவரம்!

சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான முக்கிய விவரம்!

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

Metro Rail : சேலம், திருச்சி, திருநெல்வேலியில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான ஆய்வறிக்கையை மே மாத இறுதியில் தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பிக்க உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறு குறித்த ஆய்வறிக்கை ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை போல கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், இதேபோல் சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலியில் விரைவில் மெட்ரோ ரயில் செல்வதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்தந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

First published:

Tags: Metro Rail, Tamilnadu