சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை கவர்ந்திழுக்கும் வாடகை பைக் திட்டம்

வாகனத்தை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் நிமிடத்திற்கு பத்து பைசா வீதம் 6 ரூபாயும், ஒரு கிலோமீட்டருக்கு 3 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை கவர்ந்திழுக்கும்  வாடகை பைக் திட்டம்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 10:29 PM IST
  • Share this:
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளை கவர்ந்திழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிர்வாகம், தற்போது வாடகை இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களையும், நகரின் பல பகுதிகளையும் இணைக்கும் வகையில் மின்சார சைக்கிள் சேவை, இணைப்பு ஆட்டோ, இணைப்பு வேன் என பயணிகளை கவர்ந்திழுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், புதிய அறிமுகமாக வாடகை இருசக்கர வாகன சேவை, முதற்கட்டமாக வடபழனி, திருமங்கலம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

வாகனத்தை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் நிமிடத்திற்கு பத்து பைசா வீதம் 6 ரூபாயும், ஒரு கிலோமீட்டருக்கு 3 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.


Howdy Hire Bike மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து ஓட்டுநர் உரிமம், பயன்படுத்துவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், 5 நிமிடத்தில் அனுமதி கிடைத்துவிடும். அதன்பின் இருசக்கர வாகனத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.

விரைவில் சென்னை முழுவதும் 500 மீட்டர் தூரத்திற்கு ஒரு பார்க்கிங் என்ற வீதத்தில் 7ஆயிரம் முதல் 8ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளதாக Howdy Hire Bike நிறுவனர் வெங்கடேஷ் கூறுகிறார்.கொரோனா காலத்திற்கு ஏற்றவாறு Howdy நிறுவனத்தினர் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பதாக கூறும் வாடிக்கையாளர்கள், ஆட்டோ, வாடகைக் காரை விட இந்த இருசக்கர வாகன வாடகை சேவை தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.பெட்ரோல் பைக்குகளை வாடகைக்கு விடும் திட்டம் இருந்தாலும், தற்போதைக்கு வாடகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேவை மட்டுமே உள்ளது.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading