மீண்டும் துவங்கும் கடலூர் துறைமுக விரிவாக்கப் பணி: மத்திய சூற்றுச்சூழல் துறை அனுமதிகோரி விண்ணப்பம்

கடலூர் துறைமுகத்தை மீண்டும் தொடங்குவதற்காக மத்திய சுற்றூச்சூழல் துறையின் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி கோரி இத்துறைமுகத்தை நடத்தி வரும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் விண்ணப்பித்துள்ளது.

மீண்டும் துவங்கும் கடலூர் துறைமுக விரிவாக்கப் பணி: மத்திய சூற்றுச்சூழல் துறை அனுமதிகோரி விண்ணப்பம்
கடலூர் துறைமுகம்
  • Share this:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான கடல் போக்குவரத்து துறைமுகமாக விளங்கிய கடலூர் துறைமுகத்தில் 1960-களுக்குப் பிறகு படிப்படியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடலூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு சாகர்மாலா திட்டத்தின் கீழ் 115 கோடி நிதி ஒதுக்கியிருந்தது. இதன்படி கடலூர் துறைமுகத்தில் பரவனாறு, உப்பனாறு பகுதியின் கடலூர் முகத்துவாரம் அருகில் கூடுதலாக இரண்டு சரக்கு தளங்கள் அமைப்பு மற்றும் முகத்துவாரம் ஆழமிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 59.92 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படும் சரக்கு தளங்கள் மூலம் நிலக்கரி, உரம், சிமெண்ட், மரப்பொருட்கள், வேளாண் உற்பத்தி பொருட்கள், கட்டுமான பொருட்கள், வணிகப்பொருட்கள், இயந்திரம் மற்றும் சரக்கு பெட்டகம் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டிற்கு 5.68 மெட்ரிக் டன் சரக்கை கையாளும் திறன் கொண்ட துறைமுகமாக மாற்ற திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக் கேட்பும் கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி கோரி இத்துறைமுகத்தை நடத்தி வரும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் விண்ணப்பித்துள்ளது.


இந்த விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வருகிற 30ஆம் தேதி பரிசீலிக்கவுள்ளது. நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டமானது மீண்டும் துவங்க உள்ள நிலையில் இத்துறைமுக விர்வாக்கத்தால் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும் என்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading