• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவால் வருமானமின்றி தவிக்கும் நிலையில் ரூ.20 லட்சம் செலவு செய்து திரையரங்கை புதுப்பிக்கும் உரிமையாளர்

கொரோனாவால் வருமானமின்றி தவிக்கும் நிலையில் ரூ.20 லட்சம் செலவு செய்து திரையரங்கை புதுப்பிக்கும் உரிமையாளர்

ஊரடங்கு காரணமாக தியேட்டர்களில் லாபம் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் மானாமதுரையில் பல லட்சம்  செலவில் ஒரு பாரம்பரியமான தியேட்டரைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

  • Share this:
இன்றைய கால கட்டத்தில் சினிமாவை  தியேட்டரில் போய் பார்ப்பது அரிதாகி கொண்டு வரும் வேலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், 40 வருடத்திற்கு மேலாக இயங்கி வரும் சீனியப்பா தியேட்டருக்கு  சிவகங்கை மாவட்டம் மற்றும் அருகே உள்ள மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் படம் பார்ப்பவர்கள் அதிகம் வருவார்கள். தற்போது ஊரடங்கு நேரத்தில் சுமார் 20 லட்ச ரூபாய் செலவு செய்து பாரம்பரியமான அந்த தியேட்டரை மெருகேற்றி வருகின்றார் உரிமையாளர்.

இதுகுறித்து பேசிய தியேட்டர் உரிமையாளர் சுரேஷ், மானாமதுரை பைபாஸ் ரோட்டில் மதுரை-இராமேஸ்வரம் செல்லும் சாலையில் இந்த சீனியப்பா தியேட்டர் இருக்கின்றது. சீனியப்பா திரையரங்கம்  1981ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் தியேட்டர்களில் பொது மக்கள் படம் பார்க்க வருவது அவ்வளவு சுலபம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வந்தால் உடனே இணையதளத்திலோ அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றிலோ வெளியாகிவிடுகிறது. இதனால் தியேட்டர் வைத்து லாபம் பார்ப்பது குதிரைக்குக் கடிவாளம் கட்டிய கதைதான் என்கிறார்.

பல தியேட்டர்கள் மூடப்பட்டு திருமண மஹால் ஆன நிலையில் வேறு ஒரு மாவட்டத்தில் இருந்து இந்த தியேட்டரில் வந்து பார்க்கும்  வகையில் தியேட்டரை வடிவமைத்து உள்ளார் சுரேஷ். அதிநவீன சவுண்ட் சிஸ்டம், பெரியமால்களில் இருக்கும் குஷன் சீட், இவை எல்லாம் போட்டு வடிவமைத்து உள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விலையை வைக்கிறார். தற்போது புதுபிக்கும் பணியில் தீவிரமாக வேலை செய்து வரும் சுரேசுக்கு லாபம் தரும் மரக்கடைகள், பெயிண்ட் சேம்பர் போன்ற  பல பிசினஸ்கள் இருக்கின்றன.

சுரேஸ் கூறும்போது, தாத்தா காலத்தில் தொடங்கப்பட்ட தியேட்டர் தற்போது என் மகன் காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்கால சூழ்நிலையில் சுத்தமாக லாபம் இல்லாத தொழில் என்றால் அது தியேட்டர் மட்டுமே. மக்களை  தியேட்டருக்குக் கொண்டு வர வைக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வருகின்றோம். இந்தத் தியேட்டர் டிஜிட்டலுக்கு மாறினாலும்  பழையதை மறக்கமல் இருப்பதற்கு அவருடைய தாத்தா காலத்தில் பயன்படுத்திய மரப் பெட்டிகள் மற்றும் ஃபிலிம் ரோல் கொண்ட லென்ஸ் மிஷின்களைப் பயன்படுத்தி வந்ததை நினைவாக அதனை எடுக்கமால் இருந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட மாற்றாமல் வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: