பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உத்தரவு  - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

மதுரை உயர்நீதிமன்ற கிளை

சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சாலையோரங்கள், அரசு இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு,

    தஞ்சாவூரை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில், தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சில சிலைகளை, அனுமதி பெற்றும், சிலவற்றை, அனுமதி இன்றியும் வைத்துள்ளனர். அத்தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர்.அப்போது, போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்படுகின்றனர். சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கிறது. சில இடங்களில், சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது, அரசின் கடமை. தமிழகத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், அனுமதி பெற்ற சிலைகளின் அருகிலுள்ள ஏணிகளை அகற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சாலை ஓரங்கள், சாலை நடுவில், பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.
    Published by:Ramprasath H
    First published: