ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளிகளில் உள்ள சாதி பெயர் அடையாளங்களை நீக்க வேண்டும்: சட்டப்பேரவையில் விசிக கோரிக்கை

பள்ளிகளில் உள்ள சாதி பெயர் அடையாளங்களை நீக்க வேண்டும்: சட்டப்பேரவையில் விசிக கோரிக்கை

பனையூர் பாபு

பனையூர் பாபு

பட்டியல் இனத்தவர் குடியிருப்பை காலனி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக சான்றோர் குடியிருப்பு அல்லது தொல்தமிழர் குடியிருப்பு என குறிப்பிட வேண்டும் என்றும் அரசுக்கு பனையூர் பாபு கோரிக்கை வைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள சாதி பெயர் அடையாளங்களை நீக்கிட அரசு உறுதி செய்ய வேண்டும்  என்று சட்டப்பேரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் பணிகள் பாபு கோரிக்கை வைத்தார்.

சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு பேசினார். அப்போதுஅவர்,  ஓராண்டை நிறைவு செய்யும் திராவிட மாடல் ஆட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார வரவேற்கிறது

தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்த 12 மணி நேரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்து அதனை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள சாதி பெயர் அடையாளங்களை நீக்கிட அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியின் பெயரை சமூக நல பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகளை மிகச் சிறந்த கட்டமைப்பு கொண்டதாக மாற்ற வேண்டும்.

இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.. சிபிசிஐடி விசாரித்தால் நேர்மையாக இருக்காது.. எடப்பாடி பழனிசாமி

மாணாக்கருக்கு உணவுக்கு என ஒதுக்கப்படும் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்று இருப்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நீதித்துறையில் பட்டியல் வகுப்பினருக்கு, பழங்குடி இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வழிவகை காண வேண்டும், அரசு வழக்கறிஞர் பணி நியமனங்களில் போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கிட வேண்டும். கிறிஸ்தவம் தழுவும் ஆதிதிராவிட மக்கள் மத்திய அரசின் அரசாணை மூலம் இட ஒதுக்கீடு உரிமையை பறிகொடுத்து தவிக்கின்றனர், அம்மக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை, கிறிஸ்தவம் தழுவினாலும் அதே இட ஒதுக்கீட்டை பெற்றிட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும் படிக்க: பௌத்தம், சமணம், சாதி சடங்குகளை பின்பற்றாத கோவில்களை இணைத்து புதிய அறநிலையத்துறை: விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் வேண்டுகோள்

சாதியால் அடையாளப்படுத்துவதை பெருமையாக கருதும் சமூக கட்டமைப்பில் சாதிய அடையாளத்தை அவமானமாக கருதும் தன்மை கொண்டவர்கள் பட்டியல் வகுப்பினர். எனவே அவர்களது குடியிருப்பை காலனி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக சான்றோர் குடியிருப்பு அல்லது தொல்தமிழர் குடியிருப்பு என குறிப்பிட வேண்டும், மேலும் தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லுக்கு பதிலாக பட்டியல் வகுப்பார் என்ற சொல்லையே அரசு பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

First published:

Tags: Tamilnadu govt, TN Assembly, VCK