Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்ந்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை. எனவே, அவரை நியமிக்கும் வரையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க கூடாது எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி G.R. சுவமிநாதன்,  முன்  கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் இந்தாண்டு மார்ச் 17இல் ராஜினாமா செய்தார். சட்டத்துறை உறுப்பினர் இந்தாண்டு மே 5இல் ஓய்வு பெற்றார். இரு காலியிடத்தை அரசு ஒரே நேரத்தில் நிரப்பியிருக்கலாம். ஆகவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Also Read : போதை பொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் மத்திய அரசு தான் - அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில்,  தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நபரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தனி நீதிபதி இதனை கருத்தில் கொள்ளாமல் , தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .  இதனால் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.   ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த. மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள்  S.S. சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி  உத்தரவு பிறப்பித்து இருந்தார்.  இந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு  தடை விதிக்கப்படுகிறது. மேலும் எதிர் மனுதாரர்கள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி