• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரிமோட் மூலம் சிக்னலை இயக்கும் திட்டம்.. கோவை மாநகரில் சோதனை முயற்சி

ரிமோட் மூலம் சிக்னலை இயக்கும் திட்டம்.. கோவை மாநகரில் சோதனை முயற்சி

டிராபிக் போலீஸ்

டிராபிக் போலீஸ்

ரிமோட் கன்ட்ரோல் மூலம் சிக்னல்களை இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
கோவை மாநகரில் சோதனை முயற்சியாக போக்குவரத்து போலீசார் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமான கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, மருதமலை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களை போக்குவரத்து போலீசார் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

சிக்னல்களை காவலர்களே  வாகனங்கள் நிற்கும் அளவிற்கு ஏற்ப,  தேவையான நேரம் அவகாசம் கொடுத்து போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். மேலும் போலீசார் பணியில் இல்லாத சமயத்தில் தானியங்கி முறையில் நேர அடிப்படையில் சிக்னல்கள்  இயக்கி வருகின்றனர்.போக்குவரத்து போலீசார்  நிழற்குடையில் அமர்ந்து சிக்னல்களை  இயக்குவதால் ,  சிக்னலை மதிக்காமல் செல்வதும் அதிக வேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற விதி மீறல்கள் நடைபெறுகிறது.இதனால் போக்குவரத்து காவலர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து  இறங்கி வந்து விதிமுறைகளை தடுக்க முடியாத நிலை இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து சோதனை முயற்சியாக சிக்னல்களை போலீசார் ரோட்டில் நடந்து கொண்டே ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சியாகடெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நிழற்குடையில்  அமராமல் சாலையில் நடந்தபடி போக்குவரத்தை நெரிசலை காவலர் கட்டுபடுத்துவதுடன், விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், இந்த  ரிமோட் கன்ட்ரோல் மூலம்  100 மீட்டர் தூரத்தில் உள்ள சிக்னல்களை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்ய மாநகர போக்குவரத்து காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: