• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Remdesivir : மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு

Remdesivir : மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு

ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் மருந்து

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

  • Share this:
    தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டப்படது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

    சார்ஸ் போன்ற வைரஸ் தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ்க்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றன.

    இதற்கிடையில், கள்ளச்சந்தையில் மருந்துகள் 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக அரசு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மருந்துகளின் உரிய விலைக்கு விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.

    Must Read : ரெம்டெசிவர் மருந்தின் பயன்பாடு என்ன..? எவ்வாறு செயல்படுகிறது..? தெரிந்துகொள்ளுங்கள்

     

    நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே மருந்து திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: