ஊரடங்கு காரணமாக கூலித் தொழிலாளர்களின் வாழ்வு புரட்டிப்போட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் நாகூர், திட்டச்சேரி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தகரம், மூங்கில் கொண்டு முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. திருமருகல் ஒன்றியம் சேவாபாரதி சன்னமங்களம் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கூலி வேலை செய்தால் மட்டுமே குடும்பத்தை நடத்தமுடியும் என்ற நிலையில் இருந்த இவர்களின் குடும்பங்களை வாட்டி வதைக்கிறது இந்த ஊரடங்கு. கடந்த ஒருமாத காலமாக வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பதாக கூறும் அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதே கேள்விக்குறியாக இருப்பதாக கண்ணீருடன் கூறுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒருமாத காலமாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு அங்காடியில் வழங்கப்பட்ட அரசியும் தரமில்லாமல் புழு, பூச்சி நிறைந்தவையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடும் சிரமத்தால் அதையும் பொருட்படுத்தாமல் கஞ்சி காய்ச்சி குடிப்பதாகவும், கூலி வேலை செய்தால் மட்டுமே தங்களுக்கு பிழைப்பு என்றும் வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி வாசிகள்.
பனங்குடி, சமத்துவபுரம், வாஞ்சூர், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் இதே நிலைதான். பெயிண்டர், கொத்தனார், ஆசாரி உள்ளிட்ட கூலி வேலைகளும் தற்போது இல்லாத காரணத்தால் அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதே சிரமமாக உள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள், அப்படி கடன் வாங்கி பொருட்கள் வாங்க சென்றாலும் காவல்துறையின் கடும் நெருக்கடிகளை சந்திப்பதாகவும் கூறுகின்றனர்.
தொடர்ந்து, ஒருமாத காலமாக வயதானவர்கள், மாற்று திறனாளிகள் என முடியாதவர்களை வைத்து கடும் சிரமபடுவதாக கூறும் அப்பகுதி பெண்கள், ஏழை குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பவர்கள் ஊரடங்கு காலத்திலும் அன்றாடம் குடும்பத்தை ஓட்டினாலும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளது இந்த ஊரடங்கு. பலகட்ட விழிப்புணர்வு பணிகளில் அரசு துரிதமாக ஈடுபட்டு கொண்டிருந்தாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை கூலி தொழிலாளர்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உத்தரவை அறிவுறுத்தலின் பேரில் சேவா பாரதி சுனாமி குடியிருப்பு கூலித் தொழிலாளிகளின் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனம், சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனம், சிவசக்தி நிறுவனங்கள் மூவரும் இணைந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினர். நாகை வட்டாட்சியர் பிரான்சிஸ், நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், தொழிலதிபர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கும், நாகை மாவட்ட நிர்வாகத்திற்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.