Home /News /tamil-nadu /

Headlines Today : இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்... பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு - தலைப்புச் செய்திகள் (மே 18-2022)

Headlines Today : இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்... பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு - தலைப்புச் செய்திகள் (மே 18-2022)

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் - பேரறிவாளன்

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் - பேரறிவாளன்

Headlines Today : தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் இன்று அனுப்பப்படுகின்றன.

  பேரறிவாளன் விடுதலை வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்.

  தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் இன்று அனுப்பப்படுகின்றன.

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் ' திராவிட மாடல் ' அரசு செயல்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  டெல்லி மற்றும் சென்னையில் தனது வீடுகளில் சிபிஐ நடத்தும் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம் மாநிலத்தில் மீட்புப்பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 2 போர்க் கப்பல்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

  மன்னார்குடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் கும்மியடித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, ப.சிதம்பரத்தை நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

  அதிமுக-வுடன் தான் நிச்சயம் இணையப் போவதாக வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

  தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஐயாரப்பர் ஆலயத்தில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

  நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சர்களிடம் தமிழக எம்.பி.க்கள் குழு இன்று வலியுறுத்த உள்ளது.

  அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.

  பொதுத்துறை நிறுவனமான எல் ஐ சி-யின் பங்குகள், முதல் முறையாக பங்குச்சந்தைகளில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், பங்குகள் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்தது.

  75ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.

  ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு, தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு.

  உடல் எடையைக் குறைக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நடிகை சேத்தனா மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Must Read : வீடுகளுக்காக நரிக்குறவர் இன மக்களிடம் பண வசூல் - ஒப்பந்ததாரர் மீது பகீர் புகார்

  இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரை போலீஸார் கைதுசெய்தனர்.

  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடை, இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் தகவல்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

   
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி