Home /News /tamil-nadu /

குஜராத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தியில் ரூ.5.95 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்

குஜராத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தியில் ரூ.5.95 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் ஒப்பந்தம்

ரிலையன்ஸ் ஒப்பந்தம்

Reliance | குஜராத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் 5.95 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் குஜராத்தில் அடுத்து வரக்கூடிய 10-15 ஆண்டுகளில் 5.95 லட்சம் கோடி ரூபாயை பசுமை ஆற்றல் மற்றும் மற்ற திட்டங்களில் முதலீடு செய்யவுள்ளது. பெரிய அளவிலான தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் மாசற்ற ஆற்றல் தொழிலை மேற்கொள்ளவுள்ளது.

    எண்ணெய், மற்றும் தொலைதொடர்புத்துறையில் முக்கிய நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து மாநிலத்தில் 100 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கக் கூடிய ஆலைகளை அமைத்து பசுமை ஹைட்ரோஜன் சுற்றுச்சூழலில் பங்காற்றவுள்ளது.

    மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் கூடுதலாக 60,000 கோடி ரூபாயை முதலீடு செய்து ஹைட்ரஜென் உற்பத்தி, ஆற்றலை சேமிக்கக் கூடிய பேட்டரிகள், எரிபொருள் பேட்டரிகளை உருவாக்குவதற்கான நான்கு பெரிய தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளது. மேலும், 25,000 கோடி ரூபாயை அடுத்த மூன்று முதல் 5 ஆண்டுகளில் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் தொழிலில் முதலீடு செய்யவுள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனம் 3-5 ஆண்டுகளில் கூடுதலாக 7,500 கோடி ரூபாயை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து 5-ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவுள்ளது. அதேபோல, 3,000 கோடி ரூபாயை சில்லறை வர்த்தகத்தில் முதலீடு செய்யவுள்ளது. வைப்ரண்ட் குஜராத் உச்சி மாநாடு 2022-ன் ஒரு முதலீட்டு அங்கமாக குஜராத் மாநில அரசுடன் அந்த மாநிலத்தில் 5.95 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்த மாநிலத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

    குஜராத் மாநில அரசுடன் கலந்து ஆலோசனை செய்து 100 ஜிகா வாட் திறனுள்ள புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உருவாக்கக் கூடிய ஆலையை அமைப்பதற்கு குட்ச், பனகந்தா, டோலேரா மாவட்டங்களில் இடத்தைத் தேர்வு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. குட்ச் மாவட்டத்தில் 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தேடிவருகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Reliance

    அடுத்த செய்தி