ரிலையன்ஸ் நிறுவனர் நாளை முன்னிட்டு நியூஸ்18 குழுமம் சார்பாக இரத்த தான முகாம் இன்று நடைப்பெற்றது.
தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்று சொல்வார்கள். இது முற்றிலும் உண்மையான ஒன்று தான். உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ஒருவருக்கு இரத்தம் கொடுப்பது மூலம் உயிர் பிழைக்கும் அளவுக்கு இரத்த தானம் உயர்வானது. இரத்த தானம் குறித்த விழப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் Reliance founders day முன்னிட்டு நியூஸ்18 குழுமம் சார்பாக இரத்த தான முகாம் இன்று (ஜனவரி 28) நடைப்பெற்றது. தமிழ்நாடு அரசு இரத்த பரிமாற்று குழுமம் சார்பில் மருத்துவர் உமா மகேஷ்வரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் இந்த இரத்த தான முகாமை நடத்தினர்.
இதில் நியூஸ் 18 தமிழ்நாடு சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் வழங்கினர். மருத்துவர் உமா மகேஷ்வரன் இரத்த தானம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Donation, News18 Tamil Nadu