முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு? - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்

இவிகேஎஸ் இளங்கோவன், தென்னரசு

இவிகேஎஸ் இளங்கோவன், தென்னரசு

இறுதிக்கட்டப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகிஉள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக, பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழுவினர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேராசிரியர்  ச. ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 39.5 சதவிகித வாக்குகளுக்கும், அதிமுகவுக்கு 24.5 சதவிகித வாக்குகளுக்கும், நாம் தமிழர் கட்சிக்கு 9.5 சதவிகித வாக்குகளுக்கும், தேமுதிகவுக்கு 2 சதவிகித வாக்குகளுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவு

அதே நேரம் முதல் வாக்காளர் உள்ளிட்ட 21 வயதுக்குப்பட்ட இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே முதலிடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி நாம் தமிழர் கட்சி 29.5 சதவிகிதமும் காங்கிரஸ் 28.5 சதவிகிதமும் அதிமுகவுக்கு 17 சதவிகிதமும் தேமுதிகவுக்கு 3 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

மேலும் கல்வி, தொழில், சாதி, மதம், பாலினம் ஆகிய பிற அனைத்துக் காரணிகளைப் பொருத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் முதலிடத்திலும் அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Erode Bypoll