Home /News /tamil-nadu /

பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்த பிரபலங்கள்..!

பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்த பிரபலங்கள்..!

பேரறிவாளன்.

பேரறிவாளன்.

இயக்குனர் பா.ரஞ்சித், “சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.” என்று ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் வலியுறுத்தியுள்ளனர். இதையொட்டி, ரிலீஸ் பேரறிவாளன் என்று ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை, விடுதலை செய்ய வேண்டி, கடந்த 2018 செப்டம்பரில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அத்துடன், ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, "தாய்மனம் ஏங்குது விடுதலை வேண்டுது" என்ற ராப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    பேரறிவாளன் விடுதலை செய்ய கோரிய இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, கோவை வேலாண்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், திரைப்பட இயக்குநர்கள் பொன்வண்ணன், மிஷ்கின், வெற்றிமாறன், பா.ரஞ்சித் நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் காணோலி மூலம் பங்கேற்றனர்.

    அப்போது, பேரறிவாளனை விடுதலை செய்வதில், தமிழக ஆளுநர் இனியும் காலதாமதம் செய்யக் கூடாது என அற்புதம்மாள் கேட்டுக்கொண்டார். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் குற்றம் அற்றவர் என விசாரணை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை திரையுலகினர் சுட்டிக்காட்டினர். எனவே, அவரை விடுதலை செய்வதில் மேலும் காலம் தாழ்த்தக் கூடாது எனவலியுறுத்தினர்.

    இயக்குனர் பா.ரஞ்சித், “சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.” என்று ட்வீட் செய்துள்ளார்.

    இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், “குற்றம் செய்யமல் ஒரு மனிதன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தனது மகனை மீட்க 30 ஆண்டுகளாக ஒரு தாயின் போரட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரையும் ஆளுநருக்கும் எங்களுடைய வேண்டுகோளாக வைக்கிறோம். தயவு செய்து இதற்குப் பிறகாவது தாயையும் மகனையும் சுதந்திரமாக வாழவிடுங்கள்.” என்று கூறினார்.

    நடிகர் விஜய் சேதுபதி, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஆளுநர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யனும் என்று வேண்டி கேட்டுக்கிறேன். அற்புதம்மாள் அவர்களுடைய 29 வருட போராட்டம் ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கள் என்று வேண்டி கேட்கிறோம். தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்பை மதித்து பேரறிவாளன் அண்ணன் அவர்களை சீக்கிரமாக விடுதலை பண்ணனும்” என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஸ்டேக்கும் இணையத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.



    நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Perarivalan

    அடுத்த செய்தி