ஆர்.எஸ்.எஸ் தலைவருக்காக சாலையை சீரமைக்க உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் விடுவிப்பு

ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மதுரையில் சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நான்கு நாள் சுற்றுப்பயணமாக மோகன் பகவத் இன்று தமிழகம் வருகிறார்.

 • Share this:
  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

  மதுரையில் சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நான்கு நாள் சுற்றுப்பயணமாக மோகன் பகவத் இன்று தமிழகம் வருகிறார். இதையடுத்து, மதுரை விமானநிலையத்திலிருந்து சத்யசாய்நகர் வரையுள்ள சாலைகளை சீரமைத்து, தெரு விளக்குகளை பராமரிக்குமாறு மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் சண்முகம் உத்தரவிட்டார்.

  Also Read : முதல்வன் பட பாணியில் ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை... நிர்வாகிகள் கலக்கம்

  இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்த நிலையில், அரசின் எந்த விதிகளின் படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என, எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். அதைதொடர்ந்து, உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு எப்போதும் செய்யக் கூடிய பணி தான் இது என, துணை ஆணையர் விளக்கமளிதிருந்தார்.

  Also Read :  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு!

  இந்நிலையில், துணை ஆணையரை பணியில் இருந்து விடுவித்து, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி. வெங்கடேசன், இந்த உத்தரவு மொத்த அரசு நிர்வாகத்திற்கும் சரியான செய்தியை வழங்குவதாக குறிப்பிட்டு உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: