ஊரடங்கில் தளர்வு - இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை

கொரோனா கால ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள சில தளர்வுகள் சென்னை வாசிகளின் பழைய வாழ்க்கையை மீட்டெடுக்கத் தொடங்கி இருக்கிறது.

ஊரடங்கில் தளர்வு - இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை
பட்டினபாக்கம்
  • Share this:
உலகையே கட்டிப் போட்ட கொரோனா பரவல் மக்களை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் முடக்கிப் போட்டிருக்கிறது. ஆறாம் கட்ட ஊரடங்கில் வழங்கப்பட்ட சில தளர்வுகளால் புற்றீசலாய் புறப்பட்ட மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திருவிழாக் கோலம் பூண்டுள்ளதும், அங்கு மீன் சந்தை மீண்டும் செயல்படுவதுமே இதற்குச் சான்று.

பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெளி உலக தொடர்பே இல்லாமல் குழந்தைகள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக குடும்பம் குடும்பமாக கடற்கரை அலைகளுடன் நனைந்து கரைய வந்துள்ளனர்.

Also read... கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க ரோபோ கண்டுபிடித்த இளைஞர்..


விளையாட்டு வீரர்களையும் இந்த ஊரடங்கு விட்டு வைக்கவில்லை. 4  மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்கள், அரசு வழங்கிய தளர்வுகளால் கடற்கரை மணலில் அந்தரத்தில் பறந்து அந்திப்பொழுதை அலங்கரித்தனர்.

காதலர்களின் அன்புப் பரிமாற்றம் அலைகடலின் ஓசையையும் மிஞ்சியது. சிலரின் அத்துமீறல்கள் குடும்பங்களுடன் வந்து இருப்பவர்களை சற்று முகம் சுளிக்கவும் வைத்தது.

மொத்தத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரை பொது மக்களின் வருகையால் பழைய சிங்காரச் சென்னையாக துளிர்விட தொடங்கியுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading