கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கில், இதுவரை 8 கட்டங்களாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜனவரி மாதத்திற்கான கட்டுப்பாடுகள் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதைதொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 28ம் தேதி வரையில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி உள்பட, அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கும் அதிகமாக ரசிகர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.