சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு... சடலத்துடன் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்!

சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு... சடலத்துடன் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்!
சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்
  • News18
  • Last Updated: November 19, 2019, 3:20 PM IST
  • Share this:
கரூர் அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை கேட்டு இறந்தவரின் சடலத்துடன் காவல்நிலையம் முன்பு உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் கவரபட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உடல் நல குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து சொந்த ஊரான கவரப்பட்டிக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் இறுதி சடங்குகளுக்கு பின் அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.


ஆனால், சுடுகாட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால், பாலவிடுதி காவல்நிலையம் முன்பு சந்திரசேகரின் சடலத்துடன் அவரது உறவினர்களும், அப்பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த கரூர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் அவர்களிடம் சாமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also see...
First published: November 19, 2019, 3:20 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading