சிதம்பரம் அருகே உயரம் குறைவான ஜோடிக்கு திருமணம்... உறவினர்கள், பொதுமக்கள் வாழ்த்து!

சிதம்பரம் அருகே உயரம் குறைவான ஜோடிக்கு திருமணம்... உறவினர்கள், பொதுமக்கள் வாழ்த்து!
ஜெயபிரகாஷ் மற்றும் கலைசெல்வி திருமணம்
  • News18
  • Last Updated: December 3, 2019, 3:20 PM IST
  • Share this:
சிதம்பரம் அருகே உயரம் குறைவான மணமக்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயப்பிரகாஷ். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் சுமார் மூன்றரை அடி மட்டுமே உயரம் கொண்டவர். அதே கிராமத்தில் சிறிய பெட்டியை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெண் தேடினர். பல இடங்களில் தேடியும் அவரது உயரத்திற்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை.


இந்நிலையில் அவரது குடும்பத்தினர் திருமண தகவல் நிலையங்களை அனுகி அதன் மூலம் வரன் தேடினர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகளான கலைச்செல்வி என்ற பெண் கிடைத்தார்.

ஜெயபிரகாஷ் மற்றும் கலைசெல்வி


ஜெயக்குமாரின் உயரத்திற்கு ஏற்ப கலைச்செல்வியின் உயரமும் இருந்ததால் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கலந்து பேசி இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.பின்னர் பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோயிலில் ஜெயப்பிரகாஷ் மற்றும் கலைச்செல்விக்கு திருமணம் நடந்தது. இதில் இரு தரப்பினரின் குடும்பத்தினர்களும்,  உறவினர்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading