HOME»NEWS»TAMIL-NADU»relatives gave petrol as gift to the wedding couple sur

திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் கொடுத்த உறவினர்: சுவாரசிய நிகழ்வு

எனது தங்கைக்கு வேறு ஏதேனும் ஒரு ஹிப்ட் வழங்குவதை விட, ஐந்து லிட்டர் பெட்ரோல் கொடுத்ததால் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு வாகனத்தில் மகிழ்ச்சியாக சுற்றுவார்கள்.

திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் கொடுத்த உறவினர்: சுவாரசிய நிகழ்வு
பெட்ரோல் பரிசு
  • Share this:

திருமண நிகழ்ச்சிகளில் மணமக்களுக்கு, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம். சிலர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும், மணமக்கள் என்றும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் பொருட்களையும் வழங்குவர். அந்த வரிசையில் சேலத்தில் ஒருவர் வித்யாசமான பரிசுப் பொருள் ஒன்றை மணமக்களுக்கு  கொடுத்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் நாடு முழுவதும் உயர்ந்து தினமும் புது உச்சத்தை கடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஆங்காங்கே நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்கள் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதே போல பெட்ரோல் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டதை உணர்த்தும் வகையிலான மீம்ஸ்கள், கருத்து படங்கள், முகநூல், வாட்ஸ்அப்,  ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



இந்தநிலையில், வேலூர் பகுதியை சேர்ந்த முகமது ரகுபதின் என்பவருக்கும், கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியை சேர்ந்த ஜபசூம் நசியா என்பவருக்கும் சேலம் கோட்டை பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி, வாழ்த்தி சென்றனர்.

இதனிடையே மணமகளின் உறவினர் முகமது காசிம் என்பவர் கொண்டுவந்த பரிசு பொருளை பார்த்து திருமண மண்டபத்தில் இருந்த அனைவரும் வியப்படைந்தனர். ஒரு பிளாஸ்டிக் கேனில் ஐந்து லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டு, அந்த கேன்இன் மீது 'பெட்ரோல் ஐந்து லிட்டர்' என எழுதப்பட்டிருந்தது.

மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை முகமது காவிம் திருமண பரிசாக வழங்கியதும், திருமண மண்டபமே கலகலப்பானது. மணமக்களும் எந்த வித தயக்கமும் இன்றி, சிரித்த முகத்தோடு பெட்ரோலை பெற்றுகொண்டு, புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் கொடுத்த முகமது காசிம் இது குறித்து கூறும்போது, ‘பெட்ரோல் விலை தங்கம் போல கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்டும் தருவாயில் உள்ளது. உலகிலேயே தமிழ்நாட்டில் தான் இவ்வளவு விலை உயர்ந்த பொருளாக பெட்ரோல் மாறிவிட்டது. எனவே எனது தங்கைக்கு வேறு ஏதேனும் ஒரு ஹிப்ட் வழங்குவதை விட, ஐந்து லிட்டர் பெட்ரோல் கொடுத்ததால் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு வாகனத்தில் மகிழ்ச்சியாக சுற்றுவார்கள் என்றார்.

Petrol-Diesel Price | இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: நிலவரம் என்ன?

 

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கிய நிகழ்ச்சி திருமணவிழாவில் சுவாரசியத்தை  ஏற்படுத்தும் விதமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் மணமக்கள் மட்டுமின்றி அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது.
Published by:Suresh V
First published: