முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரேலா மருத்துவமனை டாக்டர்கள் இனி அரசு மருத்துமனையில் ஆபரேஷன் செய்வார்கள்.. ஏன்?

ரேலா மருத்துவமனை டாக்டர்கள் இனி அரசு மருத்துமனையில் ஆபரேஷன் செய்வார்கள்.. ஏன்?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

Rela Hospital : ரேலா மருத்துவமனைக்கும் அரசு மருத்துமனைகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் இனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் ரேலா மருத்துவமனைக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை என 5 அரசு மருத்துவமனைகளுக்கும் இடையே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்த ஒப்பந்தத்தின் படி ரேலா மருத்துவர்கள் குழு அரசு மருத்துவமனைக்கு வந்து மாற்று அறுவை சிகிச்சையை செய்வார்கள். இந்த அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் உடனிருந்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் நோயாளிகள் மட்டும் ரேலா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவார்கள் என்றார்.

மேலும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 19 லட்சமும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு 3 லட்சமும் செலவிடப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் ஸ்டான்லி மருத்துவமனையில் 2009ஆம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இதுவரை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,043 நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 225 கோடியில் செய்யப்பட்டுள்ளது.

தலசிமியா, ரத்த புற்றுநோய், ரத்த சோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை 1,493 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 149 கோடியில் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 314 பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருகிறார்கள் என்று கூறினார்.

Read More : 5ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3ஆவது வாரத்தில் தொடங்குகிறது

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா ''உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பல மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள சிகிச்சை முறையை பின்பற்றுகின்றனர் என்று தெரிவித்தார்.

Must Read : நியூஸ்பேப்பரில் தேர்தல் விளம்பரம் வெளியிட்ட திமுக, பாஜகவுக்கு எதிராக வழக்கு.. ₹10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்

top videos

    மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 19 லட்சம் வரை அரசு செலவை ஏற்கிறது. இதனால் உரிய சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்தில் பணம் இல்லாமல் சிகிச்சை இன்றி உயிரிழக்கும் எண்ணிக்கை இல்லை எனவும், மற்ற மாநிலங்களில் பணம் இல்லாததால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் பலர் உயிரிழக்கின்றனர். இதன் மூலம் தமிழக சுகாதாரத்துறை மக்களின் சிகிச்சைக்காக தொகை ஒதுக்குவதில் முன்னோடி மாநிலமாக உள்ளது எனவும் புகழாரம் சூட்டினார்.

    First published:

    Tags: Govt hospital, Rajiv gandhi Hospital