• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • #RejectZomato ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்த தமிழர்கள் - மன்னிப்பு கேட்ட சொமோட்டோ நிறுவனம்!

#RejectZomato ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்த தமிழர்கள் - மன்னிப்பு கேட்ட சொமோட்டோ நிறுவனம்!

zomato

zomato

Reject Zomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  • Share this:
இந்தி தேசிய மொழி, ஓரளவுக்காவது இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று வாடிக்கையாளரை அறிவுறுத்திய சொமோட்டோ ஊழியரை கண்டித்து ட்விட்டரில் #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமோட்டோ அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சில மாதங்கள் முன்னர் பெங்களூருவில் சொமோட்டோ ஊழியர் தன்னை தாக்கி அவமதித்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். இருப்பினும் அதற்கு நேர்மாறாக இருந்தது உண்மை நிலவரம்.

பெங்களூரு பெண் அளித்த புகார் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மதுரையைச் சேர்ந்த ஒருவர் வேறு வகையிலான பிரச்னையை சந்தித்திருக்கிறார்.



பொதுவாகவே இந்தி மொழியை எதிர்க்கும் மாநிலமாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மதுரைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆர்டரில் ஒரு பொருள் டெலிவரி ஆகாததால் இது குறித்து சொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர்.



அப்போது தனக்கு ஒரு உணவு டெலிவரி கிடைக்கவில்லை, அதற்குரிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது.. இந்தி தேசிய மொழி, எனவே ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை செய்தார்.

இதனைக் கண்டு திகைத்த மதுரையைச் சேர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது. மேலும் பல்வேறு தரப்பினரும் சொமோட்டோவின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

zomato


இச்சம்பவம் குறித்து சொமோட்டோ மன்னிப்பு கோரியிருக்கிறது. அந்நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம்தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்தை பகிரக்கூடாது என தொடர்ந்து எங்கள் முகவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.



கோவையில் விரைவில் ஒரு உள்ளூட் கால்செண்டர் அல்லது சர்வீஸ் செண்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: