ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தனிநபருக்கு பட்டா போடப்பட்ட கலெக்டர் பங்களா...வசமாக சிக்கிய சார் பதிவாளர்..!

தனிநபருக்கு பட்டா போடப்பட்ட கலெக்டர் பங்களா...வசமாக சிக்கிய சார் பதிவாளர்..!

சார்பதிவாளர் சஸ்பெண்ட்

சார்பதிவாளர் சஸ்பெண்ட்

கலெக்டர் பங்களாவை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்து தந்த சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi), India

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் வாயிலாக பதிவாகும் மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே திருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், கச்சிராபாளையம் சாலையிலுள்ள இரண்டரை சென்ட் இடத்தை மற்றொரு நபருக்கு கிரயம் செய்துகொடுக்க ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த டிசம்பர் 7ஆம் தேதி கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகம் எண் - 2க்கு அவர்கள் சென்றனர். அங்கு பணியில் இருந்த சார் பதிவாளர் கதிரவன் மூலம் அந்த இடம் மற்றொரு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் சந்தேகமடைந்த மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தின் பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் பத்திரப்பதிவு செய்தது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பங்களாவின் ஒரு பகுதி என்பது தெரியவந்தது. அதாவது பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்துகொடுத்துள்ளார் சார் பதிவாளர் கதிரவன்.

இதுகுறித்து சென்னை பதிவுத் துறை தலைவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் புகார் அளித்தார். இதனையடுத்து கலெக்டர் பங்களாவை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து தந்த சார் பதிவாளர் கதிரவனை பணியிடை நீக்கம் செய்து பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் நடவடிக்கை எடுத்துள்ளார். கலெக்டர் பங்களாவே பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

First published:

Tags: Fraud, Kallakurichi