Home /News /tamil-nadu /

தமிழ்த்தாய் வாழ்த்து : ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து : ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து விளக்கம்

எஸ்.எம்.என்.சாமி-பழனிவேல் தியாகராஜன்

எஸ்.எம்.என்.சாமி-பழனிவேல் தியாகராஜன்

Tamil Thai Valthu : ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து இன்று மாலை RBI தரப்பில் விரிவான அறிக்கை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    73ஆவது குடியரசு தினமான நேற்று ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சாமி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.

    குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உறுதி அளித்திருந்தார்.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

    Must Read : பொட்டு வைக்ககூடாது என்று என்னை வற்புறுத்தவில்லை - அரியலூர் மாணவியின் புதிய வீடியோ

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர், தமிழக நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளார். இன்று மாலை ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விரிவான அறிக்கை வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan, RBI, Republic day

    அடுத்த செய்தி