• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர்.. (வீடியோ)

தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர்.. (வீடியோ)

Youtube Video

சிவகங்கையில் கடும் பணிச் சுமையால், வட்டார வளர்ச்சி அலுவலர் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணிச் சுமைக்கு மாவட்ட திட்ட இயக்குநர் தான் காரணமா?

  • Share this:


    ஓய்வுபெற இருந்த நிலையில் பணிக் கால நீட்டிப்பு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது கழுத்தை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றதற்கு உயரதிகாரிகள்தான் காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நடந்தது என்ன?

    சிவகங்கை செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பே இவர் ஓய்வுபெற இருந்த நிலையில், பணிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்ததால் நள்ளிரவு 12 மணிக்குத்தான் வீட்டிற்கு செல்ல வேண்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் வீட்டில் படுத்திருந்த ரமேஷைத் திடீரென காணவில்லை. அவரது மனைவி தமிழ்ச்செல்வி கணவரைத் தேடி வந்த நிலையில், சிவகங்கை ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் வந்துள்ளது.

    அங்கு சென்று பார்த்தபோது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ரமேஷ் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த சிவகங்கை போலீசார் ரமேஷை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரமேஷின் மனைவி தமிழ்ச்செல்வி அளித்துள்ள புகாரில் மாவட்ட திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் உதவித் திட்ட இயக்குநர் செல்வராஜ் இருவரும் ரமேஷுக்கு பணியில் நெருக்கடி கொடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் தன் மீதான புகார்கள் தவறானவை என்று திட்ட இயக்குநர் வடிவேல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிவகங்கை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க...தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு...







    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: