7 பேர் விடுதலை குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் எந்த அறிக்கையும் அனுப்பவில்லை. ஆளுநர் அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.

  ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் 7பேரை விடுதலை செய்வது குறித்த முடிவை, அரசியல் அமைப்பு சட்டம் 161ன் படி தமிழக ஆளுநரே எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியிருந்தது. மாநில அரசே எடுத்துள்ள தீர்மானத்தின் படி ஆளுநர் தன்னிச்சையாக முடிவினை எடுக்க வேண்டும்.  இந்நிலையில் சில நாளேடுகள் ஆளுநர் 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசிடம் ஆலோசனை கேட்க அறிக்கை அனுப்பியதாக செய்தி வெளியிட்டது. இந்தத் தகவலை தற்போது ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.

  ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் எந்த அறிக்கையும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Saroja
  First published: