ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பெற்ற சிகிச்சை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் ஆறுமுகசாமி ஆணையம் சில விளக்கங்களை கோரியுள்ளது.

  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பிலிருந்து ஆளுநர் மாளிகை செயலாளருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ அறிக்கைகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பபட்டன?

  மருத்துவ அறிக்கை பெறப்பட்டிருந்தால், ஆளுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? அதற்கு ஆளுநர் பதில் அனுப்பியிருந்தாரா ?

  ஆளுநர் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்துச் சென்றபின் அதுகுறித்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அறிக்கை அனுப்பப்பட்டதா? அல்லது தகவல் தெரிவிக்கப்பட்டதா?

  ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து எய்ம்ஸ், அப்போலோ மற்றும் ராஜ்பவன் இடையே கடித தொடர்பு இருந்ததா? அவ்வாறு தொடர்பு இருந்திருந்தால் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?

  இதுதவிர வேறு ஏதேனும் தகவல் இருந்தால் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

  தலைமைச் செயலாளருக்கு கடிதம்: இதே விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு தலைமைச் செயலாளருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

  அந்தக் கடிதத்தில், பாலாஜி தலைமையிலான 5 மருத்துவர்கள் கொண்ட குழு அரசுக்கு அறிக்கை அனுப்பினார்களா ?

  அறிக்கை வழங்கவில்லை என்றால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

  சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பினாரா?

  முன்னால் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் ஜெயலலிதா உடல்நிலை மற்றும் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, அப்போதைய பொறுப்பு முதலமைச்சருக்கு அறிக்கை அனுப்பினாரா? என்பது உள்ளிட்ட கேள்விகள் அதில் கேட்கப்பட்டுள்ளன.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Arumugasamy commission, Governor, Jayalalithaa, Letter to Raj bhavan