Home /News /tamil-nadu /

குறிப்பிட்ட பிரிவினருக்கு முடிவெட்ட மறுப்பு.. நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

குறிப்பிட்ட பிரிவினருக்கு முடிவெட்ட மறுப்பு.. நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai High Court Bench: இவ்விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ஏன் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு முடி திருத்தவில்லை? தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா? அவ்வாறு எனில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த (பறையர் வகுப்பினருக்கு) அங்குள்ள சலூன் கடைகளில், முடி திருத்த அனுமதி மறுத்து தீண்டாமை கடைபிடிக்கும் நபர்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    Read More : Hijab விவகாரம்... ‘தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது’ - கமல் ஹாசன் எச்சரிக்கை ட்வீட்

    இந்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ஏன் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு முடி திருத்தவில்லை? தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா? அவ்வாறு எனில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேலும், இவ்விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Madurai High Court

    அடுத்த செய்தி