கர்நாடகாவில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 95,000 கன அடியிலிருந்து 30,796 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
(கோப்புப்படம்)
  • Share this:
கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர், கபினி மற்றும் நுகு அணைகளில் இருந்து அதிகபட்சமாக ஒரு லட்சத்து 55,000 கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

தற்போது மழையின் தாக்கம் குறைந்து உள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 30,796 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரும் நீரின் அளவு 60,000 கன அடியாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க...கொரோனா பரவல் அதிகரிப்புக்கு தண்ணீர் பஞ்சமும் காரணம் - ஐ.நா


ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் நடைபாதைக்கு மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோரத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading