ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சரசரவென குறையும் காய்ச்சல்! தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த பன்றிக்காய்ச்சல்!

சரசரவென குறையும் காய்ச்சல்! தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த பன்றிக்காய்ச்சல்!

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், நோய்ப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது - சுகாதாரத் துறை அதிகாரிகள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் H1N1 influenza என்ற பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  நுரையீரலை தாக்கும் ஒரு வகையான வைரஸ் நோய் பாதிப்பாகும் H1N1 காய்ச்சல் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு H1N1 பாதிப்பு மீண்டும் தலை தூக்க தொடங்கியது. இந்த ஆண்டு இது வரை 1700 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர்  இது வரை பலியாகியுள்ளனர். ஆனால் தற்போது இந்நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  கடந்த பத்து நாட்கள் முன்பு வரை ஒரு நாளில் சராசரியாக 100பேருக்கு காய்ச்சல் பாதித்து வந்த நிலையில், தற்போது 50 % குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பாதிப்புகள் சரிய தொடங்கியுள்ளன என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

  தற்போது330 பேர் H1N1 நோய்க்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட சாதாரண அறிகுறிகள் கொண்ட A பிரிவினர் 79 பேர், இந்த அறிகுறிகள் கொண்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் உள்ளவர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், B பிரிவினர். இந்த பிரிவில் தமிழ்நாட்டில் 216 பேர் உள்ளனர். தொடர் காய்ச்சலுடன் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் C பிரிவினர் ஆவர். தமிழ்நாட்டில் அந்த பிரிவில் 10% பேர் தான் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது 35 பேர் உள்ளனர்.

  மழைக்காலத்தை ஒட்டி பரவும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை வசதி, சிகிச்சைக்கான மருந்துகள் எல்லாம் இருந்ததால் நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவிக்கிறார். ஒன்பது பேர் உள்நொயாளிகளாக இருந்த மருத்துவமனையில் தற்போது H1N1 பாதித்து ஒருவர் மட்டுமே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்நோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்றவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என தேரணிராஜன் தெரிவிக்கிறார்.

  இதையும் வாசிக்க: குவைத்தில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. எப்படியாவது காப்பாத்துங்க என வீடியோவில் கதறல்.. முதல்வர் தலையீட குடும்பத்தினர் வேண்டுகோள்

  மேலும் தமிழ்நாட்டில் சிகிச்சையில் உள்ள 330 பேரில் 95% பேர் தனியார் மருத்துவமனைகள் அனுமதி பெற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் A,B பிரிவினருக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டாம் எனவும் C பிரிவினருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்ய வேண்டும் எனவும் கூறும் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை தனியார் பின்பற்ற வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Swine Flu, Tamilnadu