• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கனமழை... நெல்லை மாவட்டத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

கனமழை... நெல்லை மாவட்டத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

கனமழை

கனமழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நெல்லை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் சரசரியாக நேற்று 18 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையில்92% மற்றும் மணிமுத்தாறு அணையில் 40% நீர் இருப்பு உள்ளது. கடந்த சில தினங்களாக அணைக்கு நீர் வரத்து அதிகளவில் இல்லை. தாமிரபரணி ஆற்றில் மக்கள் குளிக்க வேண்டாம் என்று கூறினார்.

    மேலும், நெல்லை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலை நம்பி கோவில், காரையாறு மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மறு உத்தரவு வரும் வரை செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

    இதனிடையே, குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!


    இதன் காரணமாக,  இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: மொழிவாரி மாநிலங்கள் பிறந்த தினம்: ஆந்திரா, கேரளா, கர்நாடகா உற்சாக கொண்டாட்டம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: