தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர்
  • News18
  • Last Updated: October 6, 2018, 1:50 PM IST
  • Share this:
தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மிக அதிக கனமழை பெய்யும் என கடந்த 4-ம் தேதி ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ம் தேதி முதல் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை இருக்கும் என்றும், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது வலுவடைந்து மண்டலமாக மாறி புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனால், கேரளாவில் 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது.

நாளை 7-ம் தேதி 25 செ.மீ மேல் அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிடப்பட்டது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் பேசுகையில், நேற்று தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று வழுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது, இது வலுப்பெற்று மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாறி ஓமன் பகுதியை அடையும்.தெற்கு அந்தமான பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்துள்ளது. வரும் 8-ம் தேதி வரை அநேக இடங்களில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். நெல்லை, கோவை, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனியில்
வரும் 7-ம் தேதி மிக அதிகனமழைக்கான எச்சரிக்கை விளக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் விலக்கிக் கொள்ளப்படுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 
First published: October 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்